யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் திடீர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணொருவர் இன்று (04) யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த பாத்திமா அன்சி மொஹமட் சுல்தான் என்ற 78 வயதான பெண்ணே உயிரிழந்தவர் ஆவார்.

பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த இவர், கொடிகாமம் கெற்பேலி இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டதில் கொரோனாத் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டார். இந் நிலையில் இன்று மாலை முட்டு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவரது குடும்பத்தினர் பளை, கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளதால், யாழ்.முஸ்லிம் மக்கள் சடலத்தைப் பொறுப்பேற்று எடுத்து நாளை யாழ்.முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யவுள்ளனர்.

Previous Post Next Post