யாழில் ஊரடங்கு வேளையில் வாள்களுடன் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வேலியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் மூன்று வீடுகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வீட்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணமும் மற்றொரு வீட்டில் 2 பவுண் எடையுடைய சங்கிலிகள் இரண்டும் கொள்ளையிடப்பட்டதுடன் மூன்றாவது வீட்டில் துவிச்சக்கர வண்டி திருடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகமூடி அணிந்து வாள்களுடன் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலே ஊரடங்கு வேளையில் இந்த துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இரண்டு வீடுகளுக்குள் புகுந்த கும்பல் அங்குள்ளவர்களை தாக்கியும் அச்சுறுத்தியும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post