யாழில் இந்தியப் பிரஜையுடன் தொடர்பிலிருந்த 13 பேரின் கொரோனா முடிவுகள் வெளியாகின!

இணுவிலில் தங்கியிருந்து இந்தியா சென்றபோது கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்ட இந்தியப் பிரஜையுடன் யாழ்ப்பாணத்தில் தொடர்பில் இருந்த பதின்மூன்று பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இணுவில் மற்றும் ஏழாலையில் 03 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 13 பேரின் மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

அவற்றின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அவற்றின் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post