யாழில் வாள்வெட்டுக்குச் சென்ற இளைஞர்களை மடக்கிப் பிடித்தது இராணுவம்!!

யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் வாள்களுடன் வன்செயலுக்கு சென்று கொண்டிருந்த ரவுடிகள் ப டையினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனா்.

இன்று மாலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,


குறித்த பகுதியால் 7 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை இராணுவம் வளிமறித்துள்ளது. இதன் போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மட்டுமே சிக்கியுள்ளனர். ஏனையவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வாளும் விசேட அதிரடி படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்.இந்து கல்லுரி மற்றும் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்தவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது ஒரு கட்டணம் செலுத்தபட்ட விளம்பரம்

Previous Post Next Post