நல்லூர் பிரதேச சபையின் அதிரடி! திருநெல்வேலியில் அனுமதியற்ற கட்டடம் இடித்தழிப்பு!!

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டடத்தினை இடித்தழிக்குமாறு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த கட்டடம் இடிக்கப்படவுள்ளதாக சபையின் தவிசாளர் தியாகமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் உள்ள அரசடி வீதி திருநெல்வேலி கிழக்கு பகுதியில் சபையின் எவ்வித அனுமதியும் பெறப்படாது கட்டடம் ஒன்று கட்டப்பட்டது.

குறித்த கட்டடத்திற்கு உரிய அனுமதியை எடுக்குமாறு சபையினால் பலமுறை அறிவுறுத்தல் வழங்கப்பட்டது .எனினும் குறித்த கட்டட உரிமையாளர் சபையிடம் இருந்து எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டடத்தை கட்டியுள்ளார்.இதனால் சபையினால் கடந்த வருடம் குறித்த கட்டடத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் சட்ட விரோதமாக சபையின் அனுமதி இன்றி கட்டப்பட்ட குறித்த கட்டடத்தினை இடித்து அளிக்குமாறு நீதிமன்றத்தினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக குறித்த கட்டடம் எதிர்வரும் திங்கட்கிழமை இடித்து அழிக்கப்படும் என்று தெரிவித்தார்.
Previous Post Next Post