
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
குறித்த குழந்தை மற்றும் இரு சிறுவர்கள் அவரது உறவினர் ஒருவருடன் அயல்வீட்டிற்கு சென்றுவிட்டு வீடுநோக்கி சென்று கொண்டிருந்தனர். இதன்போது வீசிய பலத்த காற்றில் வீதிக்கரையில் இருந்த வேப்பமரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த குழந்தை மற்றும் ஏனைய சிறுவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்களிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் காயமடைந்திருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் ஆயிலடி இராசபுரம் பகுதியை சேர்ந்த மதுசன் லக்சாயினி என்ற ஒன்றரை வயது குழந்தை சாவடைந்துள்ளதுடன், ஜீவிதா(10), சர்மிலாதேவி (8) ஆகிய சிறுமிகள் காயமடைந்துள்ளனர்.