
வேலூர் தனிச்சிறையில் தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்ற நளினி மற்றும் கணவர் முருகன் ஆகியோர் தம்மை சென்னை புழல் சிறைக்கு மாற்றவேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நளினி வேலூரில் அடைக்கப்பட்டுள்ள சிறையில் துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றதாக தெரியவருகின்றது.
வழமைபோல இந்திய ஊடகங்கள் சில அவர் சக கைதிகளுடன் இடம்பெற்ற முரண்பாடு காரணமாகவே தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியிட்டுள்ளன.