
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாட்டில் கோவிட் -19 பரவல் கட்டுப்பாட்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியைப் பேணும் வகையில் நல்லூர் கந்தன் இன்று சப்பரத்தில் வீதியுலா வரவில்லை.
நல்லூர் பதியில் அதிகளவான பக்தர்கள் இன்றும் திரண்டனர். அதனால் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலுக்கு அமைய இடப வாகனங்களில் வள்ளி, தெய்வாணை சமேதராய் நல்லூரான் வெளிவீதியுலா வந்து காட்சியளித்தார்.
இதேவேளை, நாளை காலை இரதோற்சவத் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் அடியவர்களின் வசதி கருதி சண்முகப் பெருமானை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை தரிசிக்க முடியும் என்று ஆலய தர்மகர்த்தா அறிவித்துள்ளார்.



