முதலாவதாக கொரோனாத் தொற்றுக்குள்ளான பெண் தெரிவித்த தகவல்கள்!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மினுவாங்கொட பிரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் முதலாவதாக கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண் தற்போது ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தாம் கொவிட்19 தொற்றுறுடன் அடையாளம் காணப்படுவதற்கு முன்னதாகவே பலர் அங்கு சுகவீனமுற்றிருந்ததாக அந்தப் பெண் தெரிவித்தார்.

எனினும் தொழற்சாலையின் அதிகாரிகள், அதனை சரியாக முகாமை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில், இவ்வாறு ஏற்பட்டமை தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என்றும், முன்னதாகவே தொழிற்சாலையில் பல பெண்களுக்கு தடிமன், இருமல் இருந்ததுடன், மயக்கமடைந்தும் விழுந்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நெஞ்சு வலியின் காரணமாக தான் சிகிச்சைக்காக சென்றமையினால், தன்னை அனைவரும் காப்பற்றியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையில் முன்னதாக இருந்த முகாமைத்துவம் தொடர்பில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், ஆனால், தற்போதைய முகாமைத்துவம் குறித்து தான் மிகவும் கவலையடைவதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

முன்னதாக இருந்த அதிகாரிகள், தடிமன் ஏற்பட்டதும், அது குறித்து ஆராய்ந்து பார்த்தனர்.

ஆனால், தற்போதைய முகாமைத்துவம் தொடர்பில் தான் கவலை அடைவதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக காய்ச்சல் வந்த நோயாளி தான் அல்ல என்றும், அதற்கு முன்னரே காய்ச்சல் மற்றும் மயக்கமடைந்த பலர் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு மாதமாக பணிக்கு சென்று இறுதி தினத்தில்தான் தனக்கு இவ்வாறு நடந்ததாக மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் முதலாவதாக கொவிட்-19 தொற்றுறுதியான பெண் குறிப்பிட்டார்.
Previous Post Next Post