கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த எட்டு பேர்! விபரங்கள் வெளியாகின!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணித்த பேருந்தில் கடந்த இரவு கம்பஹா மாவட்டம் சீதுவையிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களது விபரங்கள் குறித்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அரச பேருந்து கம்பஹா மாவட்டம் சீதுவைப் பகுதியில் வழிமறிக்கப்பட்டு ஏறி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தவர்கள் 09 பேர் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த 09 பேரில் ஒருவர் மதவாச்சியில் இறங்கியுள்ள நிலையில் மிகுதி 08 பேரும் யாழ்ப்பாணம் வரை தொடர்ந்து பயணித்துள்ளனர்.

இவ்வாறு யாழ்ப்பாணம் வரை பயணித்த 08 பேரில் இராணுவம் மற்றும் பொலிஸார் மூவரும் சாதாரண பொதுமக்கள் ஐவரும் எனத் மேலதிக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்தி:
Previous Post Next Post