
பிரான்சில் மேலும் பல நகரங்கள் அதிஉச்ச எச்சரிக்கை பகுதிகள் குறித்து (22/10/2020) இன்று பிரதமர் அறிவிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், பிரான்சில் தலைநகர் பாரிஸ் முதல் பல நகரங்களில் மாலை 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பிரான்சில் மிக உச்சமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அதிகரித்துச் செல்லும் உயிரிழப்புகளும் மீண்டும் நாட்டை உள்ளிருப்பிற்குள் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது
இதனால் மேலும் பல நகரங்கள் அதிஉச்ச எச்சரிக்கை பகுதியாக இன்று வியாழக்கிழமை முதல் அறிவிக்கப்படவுள்ளது.
நேற்று நடந்த அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த நிலையில், அரசாங்கத்தின ஊடகபேச்சாளரான, Gabriel Attal இன்று வியாழக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 5 மணிக்கு தொலைக்காட்சியில் பிரான்சின் பிரதமர் jean castex அறிவிக்கவுள்ளார் என தெரிவித்தார்,
பிரான்சின் அதிஉச்ச கொரோனா தொற்று நாட்டினை மீண்டும் உள்ளிருப்பிற்குள் கொண்டு வருமா என்றகேள்வி பல மட்டங்களில் எழுந்துள்ளன.