முல்லைத்தீவில் கசிப்பு பருக்கப்பட்ட நிலையில் சுயநினைவிழந்து கிடந்த இரு சிறுவர்கள்! (வீடியோ)எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிப்பு பகுதியில் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்பட்ட நிலையில் சிறுவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த சனிக்கிழமை (28) அதிகளவான போதைப்பொருள் ஊட்டப்பட்டமையினால் இரண்டு சிறுவர்களும் சுயநினைவு அற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வலுக்கட்டாயமாக சிறுவர்களுக்கு கசிப்பு பருக்கியமை தொடர்பாக இரண்டு சிறுவர்களுடைய பெற்றோர்கள் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய மேலும் பலர் (சுமார் 8 பேர்) உள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.இவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சிறுவர்களின் பெற்றோர்கள் கோரியுள்ளனர்

குறித்த சிறுவன் ஒருவனின் பெற்றோர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், குறித்த முறிப்பு இந்த கள்ளச்சாராயத்தினால் காடையர்கள், மரக்கும்பல்கள், வாள்வெட்டுக்காரர்களும் அதிகரித்து காணப்படுகின்றனர். இதனால் ஊருக்கு செல்வதற்கு பயமாக உள்ளது என்றார்.
Previous Post Next Post