வேலணையில் கொரோனா பரிசோதனை! அனைவரையும் தவறாது மேற்கொள்ள அறிவுறுத்தல்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாத் தொற்றினை கருத்தில் கொண்டு வேலணை பிரதேசத்தின் நலன் கருதி இன்று பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

வேலணை சுகாதார வைத்திய பணிமனையினால் வேலணை பிரதேச சபையின் தேவா அரங்கில் இந்தப் பரிசோதனைகள் இடம்பெறுகின்றது.

இன்று (01.12.2020) காலை 8.30 மணியிலிருந்து இப் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது. எனவே வேலணை பிரதேசத்தில் உள்ள அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிவோர், வியாபார நிறுவனங்களில் பணியாற்றுவோர் அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளைத் தவறாது மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 


Previous Post Next Post