வேலணையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட வடமாகாண சுகாதாரப் பரிசோதகர் அலுவலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் கொரோனா பரவலைத் தடுக்கும் செயற்பாடுகளில் பக்கச் சார்பாகச் செயற்படுவதாக முறையிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் சிலர் மீது வேண்டுமென்றே சுகாதார விதிமுறைகளைக் கடுமையான விதிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பக்கச்சார்பான செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டவரான கொழும்பு தெகிவளையில் வசிக்கும் கந்தையா குனநேசன் என்பவர் கொவிட் 19 வரைஸ் தடுப்புச் செயற்பாட்டுகளுக்குப் பொறுப்பான அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெர்னான்டோ முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றைக் கைளித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வேலணை வடக்கில் மத்திய மகாவித்தியாலயத்துக்கு முன்பாகவுள்ள வீதியில் உள்ள எனது புதிய விட்டின் கிரகப்பிரவேசத்துக்கான அனுமதி சென்ற நவம்பர் மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை வேலனை சுகாதாரப் பரிசோதகரினால் வழங்கப்பட்டிருந்தது.

பரிசோதகர்களின் விதிமுறைகளின்படி 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் 25பேர் மாத்திரமே கலந்துகொண்டனர்.

அதுவும் பகுதி பகுதியாகவே 25 பேரும் சமுகளித்திருந்தனர்.

நிகழ்வு முடிவடைந்து 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தபோது, செல்லிடத் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த சுகாதாரப் பதிசோதகர் ஒருவர், உங்களையும் உங்கள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டுமெனக் கடும் தொனியில் கூறினார்.

ஆனால் நிலமையைத் தான் விளங்கப்படுத்தியபோதும் அதனை அவர் ஏற்க மறுத்துத் தொலைபேசியைத் துண்டித்துவிட்டார்.

ஆனாலும் நான் கொழும்புக்குச் சென்றுவிட்டேன். அடுத்த நாள் யாழ். நகரில் உள்ள எனது உறவினர் குடும்பமும் வேலணையில் எனது புதிய வீட்டுக் கிரகப்பிரவேசத்துக்கு வந்த அனைவரையும் தனிமைப்படுத்தியதாக அறிந்தேன்.

இதனால் உடனடியாகக் கொழும்பில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனை செய்தேன்.

ஆனால் கொரோனா இல்லையென மருத்துவ அறிக்கை கிடைத்தது.

அந்த அறிக்கையுடன் உண்மை நிலவரத்தை விளக்கி எழுதப்பட்ட கடிதத்தை வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் மற்றும் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோருக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் மூலமாக நேரடியாகக் கையளித்தேன்.

ஆனால் எனது மருத்துவப் பரிசோதனை அறிக்கையை ஏற்க முடியாதெனவும் என்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டது.

இத்தனைக்கும் நான் கடந்த ஒக்ரோபர் மாதம் 11ஆம் திகதியில் இருந்து யாழ் நகரில் உள்ள எனது உறவினர் ஒருவரின் இல்லத்திலேயே தங்கியிருந்தேன்.

இது தொடர்பாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்துக்கு எனது மருத்துவ அறிக்கையும் விளக்கக் கடிதம் ஒன்றும் நேரடியாகக் கையளிக்கப்பட்ட பின்னர் வேலணை தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பங்கள் அனைத்தும் அதிலிந்து விடுவிக்கப்பட்டன.

ஆனால் வேலணையில் வாழும் எனது உறவினர்கள் சிலரும் யாழ் நகரில் நான் தங்கியிருந்த எனது உறவினரின் மற்றொரு குடும்பமும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவே இல்லையென கூறப்பட்டுள்ளது.

இச் செயற்பாடு தனிப்பட்ட பழிவாங்கல் என்றும் கொவிட்-19 சுகாதார விதிமுறைகளைப் பயன்படுத்தி சாதாரண பொதுமக்களை அடிமைகள் போன்று சுகாதாரப் பரிசோதகர்கள் சிலர் நடத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

அத்துடன் இராணுவத்தையும் பொலிஸாரையும் தங்களோடு அழைத்துச் சென்றே பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்

ஆனால் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து செல்லும் அரசியல்வாதிகளை இவர்களால் தனிமைப்படுத்த முடிகின்றதா? என்று குகநேசன் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கேள்வி எழுப்பினார்.

களுபோவில போதனா வைத்தியசாலையில் இரண்டாவது தடவையாகவும் மேற்கொண்ட பிசிஆர் பிரிசோதனையில் கொரொனா தொற்று இல்லையென இன்று திங்கட்கிழமை காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குகநேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post