யாழ்.பல்கலைக்கழகம் ஒரு சமூகத்தின் சொத்து அல்ல- சரத் வீரசேகர!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது ஒரு சமூகத்தின் பிரத்தியேக களம் அல்லது சொத்து அல்ல என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அகற்றப்பட்டமை தொடர்பில் தனது ருவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது ஒரு சமூகத்தின் பிரத்தியேக களம் அல்லது சொத்து அல்ல. இது இலங்கையை ஒரே மாதிரியாகக் கொண்ட அனைத்து சட்டங்களுக்கும் சொந்தமானது.

அப்பாவி பொதுமக்களை நினைவு கூர்வது மற்றும் ஒற்றுமையை உருவாக்குவது என்ற போர்வையில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு யாரும் அனுமதிக்கமாட்டார்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Previous Post Next Post