யாழில் கொள்ளையர்களால் வயோதிபத் தம்பதி சித்திரவதை! கணவர் கழுத்து நெரித்துக் கொலை!!


நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சிவராசா (வயது-72) என்ற வயோதிபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

வயோதிபத் தம்பதி வசிக்கும் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை வீடு புகுந்த மூவர் கொண்ட கொள்ளைக் கும்பல் அவர்கள் இருவரையும் கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளது. அதில் வயோதிபரின் கழுத்தை நெரித்ததில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

அத்துடன், வீட்டிலிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிட்டு கும்பல் தப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post