யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

யாழ்.கல்வியங்காட்டைச் சேர்ந்த (செங்குந்த பாடசாலைக்கு அருகில்) இராஜகுலேந்திரன் நிஷாந்தன் (வயது-32) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த இளைஞன் அரசடி வீதியில் உள்ள வீட்டில் பணி புரிந்து கொண்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் நொதோண் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post