நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரம் பேரைத் தாண்டியுள்ளது.
நாட்டில் மேலும் 35 பேர் கோரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயரத்து 15 பேராக அதிகரித்துள்ளது.
அத்துடன் நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றாளர்களாக 2 ஆயிரத்து 478 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 770 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 145 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். 25 ஆயிரத்து 560 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரத்து 15 பேர் உயிரிழந்துள்ளனர்.