கனடாவில் மத வெறியின் உச்சம்! ஒரு குடும்பத்தையே கொலை செய்த கொடூரம்!!


கனடாவில் பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தவர்கள் நால்வர் வாகனத்தால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்கள் பின்பற்றுகின்ற மதத்தின் மீது தீவிர வெறுப்புடைய நபரே இவ்வாறு கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு கொலையினை செய்துள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.இச் சம்பவத்தின் சூத்திரதாரியான 20 வயது நபர் தற்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி தாக்குதலில் பாகிஸ்தானிலிருந்து 14 வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்கு புலம்பெயர்ந்த 44 வயதான குடும்பத்தலைவர், அவரது மனைவி, 15 வயது மகள், குடும்பத்தலைவரது 74 வயதுடைய தாய் ஆகியோர், உச்ச வேகத்தில் வாகனத்தினால் தாக்கியதால், நசிந்து உயிரிழந்துள்ளார்கள்.

குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

சம்பவத்தின் சூத்திரதாரியாக கைது செய்யப்பட்டுள்ள நபரின் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி தடுப்புக்காவலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதலில் ஒன்றாக இந்தச் சம்பவத்தை கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post