யாழ்.போதனா வைத்தியசாலையில் 33 வயது ஆண் உட்பட மேலும் மூவர் கோவிட்-19 தொற்றால் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் உள்பட மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் அரசடி வீதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் முல்லைத்தீவைச் சேர்ந்த 33 வயதுடைய இஸ்லாமிய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

அச்சுவேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் இன்று வீட்டில் உயிரிழந்தார் என்று கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்தது.

இதேவேளை, மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 34 வயதுடைய பெண் ஒருவர் உள்பட இருவர் உயிரிழந்தனர் என்று இன்று பிற்பகல் செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post