லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா 5 ஆம் திகதி!


கிழக்கு இலண்டன் வோல்த்தம்ஸ்ரோ கற்பக விநாயகரின் தேர்த் திருவிழாவானது கொரோனாத் தொற்றின் பின்பு பல்லாயிரக்கணக்கான  மக்களோடு மிகப் பிரம்மாண்டமாக எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கோயிலின் 5 வீதிகள் ஊடாகவும் பறவைக் காவடிகள், பொம்மலாட்டங்கள் , மயிலாட்டம் இவற்றுடன் 'ராகாஸ்' இசைக்குழுவின் இன்னிசைக் கச்சேரியும் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் கோவிலைச் சுற்றி இலவச வாகனத் தரிப்பிடங்களையும் ஏற்பாடு செய்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றார்கள்.

அத்தோடு, அடியவர்களின் தாக சாந்திக்காக தண்ணீர் , மோர்ப்பந்தல்கள் மற்றும் மதிய வேளை அன்னதானமும் இடம் பெறவுள்ளதுடன், பல வியாபார நிறுவனங்களின் மலிவு விற்பனையும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கின்றார்கள் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சிவாச்சாரியர்கள்.
Previous Post Next Post