யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குழந்தையை பிரசவிப்பதற்கான அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரத்தில் வசித்து வந்த 27 வயதான அஜந்தன் துஷ்யந்தினி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குழந்தையினை பிரசவித்த நிலையில் தாயர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிறந்த குழந்தை சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post