இதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அதன்படி, 200 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட தரம் 1 முதல் 5ஆம் தரம் வரையான ஆரம்ப பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.