பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கத்தியால் குத்திப் படுகொலை!

பிரித்தானியாவில் தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கத்தியால் குத்தப்பட்ட கன்சர்வேடிங் எம்.பி சர் டேவிட் அமெஸ் (69) சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எசெக்ஸில் உள்ள Southend West தொகுதி எம்.பி-யான சர் டேவிட் அமெஸ், வெள்ளிக்கிழமை Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் நடந்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கத்தியால் குத்தப்பட்டார்.

தொகுதி மக்களுடனான கூட்டத்திற்குள் திடீரென நுழைந்த நபர், கத்தியால் சர் டேவிட் அமெஸ்-ஐ பலமுறை குத்தியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த 69 வயதான சர் டேவிட் அமெஸ்-க்கு சம்பவயிடத்திலேயே வைத்து 2 மணிநேரத்திற்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சர் டேவிட் அமெஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post