இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணம் வருகை! (படங்கள்)

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று மாலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.

இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணம் மாநகரில் அமைக்கப்பட்ட கலாசார மண்டபத்தை அவர் பார்வையிட்டார்.

நேற்று மாலை இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலர், ஒக்டோபர் 5ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார்.

இந்திய வெளியுறவு துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இலங்கை அரசியல் உயர்மட்டப் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

இந்த நிலையில் இன்று நண்பகல் திருகோணமலைக்கு சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இன்று மாலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.

யாழ்ப்பாணம் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டப்பத்தை பார்வையிடுகின்றார். அத்துடன், அதிகாரிகளையும் அவர் சந்திக்கின்றார்.

Previous Post Next Post