யாழில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

உடல் நலக்குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் தரம் 11 இல் கல்விகற்கும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ். வடமராட்சி, மண்டான் கரணவாய் தெற்கினை சேர்ந்த கணேசன் கிருசிகன் என்ற மாணவன் உடல் நல குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஒக்-01) குறித்த மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் அவரது மரண விசாரணை அறிக்கையில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post