முல்லைத்தீவில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து மீன் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார்.

எனினும் அவர் திரும்பி வராத நிலையில் இன்று அதிகாலை உறவினர்கள் தேடிச் சென்ற போது காட்டுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கெருடமடு, மன்னகண்டலை சேர்ந்த 65 வயதுடைய அழகன் கோபால்ராஜ் என தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Previous Post Next Post