கிண்ணியாவில் படகுப் பாதை விபத்து – நகரசபைத் தவிசாளர் கைது!


கிண்ணியாவில் படகுப் பாதை விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகரசபைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவதற்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய படகு உரிமையாளர் உள்ளிட்ட மூவர் நேற்றுக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நகரசபைத் தலைவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா குறிஞ்சாங்கேணி பாலத்தை ஒன்பது மாதங்களுக்குள் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர். டபிள்யூ.டபிள்யூ. ஆர். பிரேமசிறி இதனைத் தெரிவித்தார்.
Previous Post Next Post