யாழில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! பரிசோதனையில் கொரோனாத் தொற்று!!


மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த குடும்பத் தலைவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை, அராலி மேற்கைச் சேர்ந்த 34 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்தார்.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருக்கு கடந்த சில நாள்களாக தடிமன் மற்றும் காய்ச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமயைில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சங்கானை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்று இல்லை என வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்றுக் காலை ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக இன்று மாலை அறிக்கையிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post