கொட்டித் தீர்த்த கன மழை! வெள்ளக்காடாகியது யாழ்ப்பாணம்!! வீடுகளுக்கும் புகுந்தது வெள்ளம்!!! (படங்கள்)


யாழ் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் அதிகமான மழைவீழ்ச்சி காரணமாக சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

சங்கானை பிரதேச செயலகப் பிரிவின் J/179 கிராம சேவகர் பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 4 குடும்பத்தினர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

யாழ் மாவட்டத்தில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் மாவட்டத்தில் பெய்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக பாடசாலை இன்று இடம்பெறாது என மாவட்ட செயலாளர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post