பிரித்தானியப் பிரதமரை “கோமாளி” என விமர்சித்த பிரான்ஸ் ஜனாதிபதி!


போரிஸ் ஜான்சன் ஒரு கோமாளி, ஒன்றுக்கும் உதவாதவர் என கடுமையாக விமர்சித்துள்ளார் மற்றொரு நாட்டின் தலைவர்.

அவர் வேறு யாருமல்ல, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன்தான்...

சமீபத்தில், சிறு படகு ஒன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்து அதில் பயணித்த 27 புலம்பெயர்வோர் உயிரிழந்த நேரத்தில், மக்ரோன் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை தொலைபேசியில் அழைத்து அது தொடர்பாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

ஆனால், அப்போதே போரிஸ் மேக்ரானுக்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தை ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில், இரு நாடுகளின் பொலிசாரும் இணைந்து ரோந்து செல்லுதல், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் கால் வைப்பவர்களை உடனடியாக மீண்டும் பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் ஒரு ஒப்பந்தம் செய்தல் முதலான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால், அந்த கடிதம் குறித்து மேக்ரான் அறிந்திருக்கவில்லை. அப்படி ஒரு கடிதத்தை போரிஸ் வெளியிட்டது தெரியாமலே அவர் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்படி மக்ரோன் தொலைபேசியில் போரிஸ் ஜான்சனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது உதவியாளர்கள், இப்படி ஒரு கடிதத்தை போரிஸ் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் விடயத்தை அவரிடம் கூறியிருக்கிறார்கள்.

ஆத்திரமடைந்த மக்ரோன், அப்போதுதான் தன் உதவியாளர்களிடம் இப்படி போரிஸ் ஜான்சனைக் குறித்து விமர்சித்திருக்கிறார்.

என்னிடம் அவர் நன்றாக பேசுகிறார், மிகவும் பணிவாக பேசுகிறார், வளர்ந்தவர்களைப்போல இருவரும் பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால், அப்படி பேசுவதற்கு முன்போ அல்லது பேசியதற்குப் பின்போ, இப்படி ஏதாவது செய்துவிடுகிறார். இதே கோமாளித்தனம் தொடர்கிறது என பொறிந்து தள்ளியிருக்கிறார் மக்ரான்.

பிரித்தானியா சிறந்த ஒரு நாடு, ஆனால், அதன் தலைவர் ஒரு கோமாளியாக இருக்கிறார் என, பிரெக்சிட் தொடங்கி சமீபத்தைய போரிஸ் ஜான்சனின் ட்விட்டர் கடிதம் வரை வரிசையாக வைத்து வார்த்தைகளால் கடுமையாக சாடியிருக்கிறார் மக்ரோன்.
Previous Post Next Post