பிரித்தானியா செல்ல முயற்சித்த யாழ்.இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

பிரித்தானியாவுக்குச் செல்வதற்காக  அரபு நாடு ஒன்றில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் திடீர் சுகயீனமுற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்.கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த இலங்கேஸ்வரன் மைலன் (வயது-25) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த இளைஞன் முகவர் ஊடாக பிரித்தானியா செல்வதற்கு முயற்சித்த நிலையில் அரபு நாட்டில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலம் பெயர் நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் இடைநாடுகளில் அடிக்கடி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post