யாழில் மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி, புத்தூர் பகுதியை சேர்ந்த 31 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எரிகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெண்ணின் சடலம் மீதான பிரேத பிரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குடும்பப் பிரச்சினை காரணமாக தனக்குத் தானே தீ மூட்டி உயிரை மாய்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
Previous Post Next Post