இன்று மாலை மின்தடை அமுலாகும்! நேர அட்டவணை இணைப்பு!!


நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று ஒரு மணித்தியால மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் இயங்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, பின்வரும் நான்கு கட்டங்களின் கீழ் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

குழு (A) – பி.ப 5.30 முதல் 6.30 வரை

குழு (B) – பி.ப 6.30 முதல் 7.30 வரை

குழு (C) – பி.ப 7.30 முதல் 8.30 வரை

குழு (D) – பி.ப 8.30 முதல் 9.30 வரை

எவ்வாறாயினும் இதுதொடர்பாக இலங்கை மின்சார சபை இன்னும் உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 
Previous Post Next Post