இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது!


ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
 
மின்சார பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது.
 
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மின்சக்தி அமைச்சர், எரிசக்தி அமைச்சர், கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் மின்சார சபை சேவையாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் இயங்காமை காரணமாக இன்று நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியால மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post