இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்ட மீனவர் உயிர் மாய்க்க முயற்சி! படகையும் தீயிட்டு எரித்தார்!! (வீடியோ)


இந்திய மீனவர்களின் அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி மீனவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் சக மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

எனினும் அவரது மீன்பிடி படகு தீயில் முற்றாக எரிந்து நாசமாகியது.
பொலிகண்டி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கத்தின் முன்பாக இன்று முற்பகல் 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வடமராட்சி கடற்பரப்புக்குள் கடந்த வாரம் அத்துமீறிய இந்திய மீனவர்கள், வடமராட்சி மீனவர்களின் வலைகளை அறுத்து நாசப்படுத்தியிருந்தனர்.
அதனால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மீனவர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தனது மீன்பிடி வலைகளை இழந்திருந்த பொலிகண்டி கிழக்கு கடற்தொழிலாளி ஒருவர் இன்று முற்பகல் தனது படகுக்கு தீவைத்ததுடன் தனது உயிரையும் மாய்க்க முற்பட்டார். எனினும் அவரை சக மீனவர்கள் பாதுகாத்தனர்.
Previous Post Next Post