யாழில் போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட இளைஞன் உயிரிழப்பு!

போதை மாத்திரைகளை அதகளவில் உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட அவர், நேற்றிரவு உயிரிழந்தார். சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டது.

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து பிறி கப் (Pre cab) போதை மாத்திரைகளை இருவர் வாங்கியுள்ளனர்.

தண்ணீரில் நனைந்த போதை மாத்திரைகள் பல ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு காணப்பட்டுள்ளது. அவற்றை ஒரேயடியாக உயிரிழந்த இளைஞன் உட்கொண்டார் என விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு போதை மாத்திரைகளை உட்கொண்ட மற்றையவரிடமும் விசாரணையின் போது வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post