போராட்டக்காரர்களை கலைக்க ரம்புக்கனையில் துப்பாக்கி சூடு; பொதுமகன் உயிரிழப்பு! பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்! (வீடியோ)

ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று கேகாலை மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தப் போராட்டத்தை அடக்க பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையில் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 8 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

சம்பவத்தில் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாக கேகாலை மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவர்களில் 04 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வைக் கோரி இன்று அதிகாலை 1.30 மணி முதல் கண்டி-கொழும்பு ரயில் பாதையை ரம்புக்கனை நகரில் இருந்து மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக இன்று காலை முதல் தொடருந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.

போராட்டத்தின் போது பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சிலர் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ரம்புக்கனை பொலிஸ் பகுதியில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
Previous Post Next Post