கடமை நேரத்தில் டிக்டாக்கில் காணொளி பதிவிட்ட பெண் ஊழியருக்கு இடமாற்றம்!

வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய பெண் உத்தியோகத்தர் ஒருவர் கடமை நேரத்தில் டிக்டாக் காணொளியை பதிவிட்டமையால் வைத்தியசாலை பணிப்பாளரினால் குறித்த உத்தியோகத்தருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் கடமை நேரத்தில் டிக்டாக் காணொளியைப் பதிவு செய்துள்ளார்.

குறித்த காணொளியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பெண், ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தித் தகாத வார்த்ததைப் பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்து வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கடமை நேரத்தில் டிக்டாக் காணொளியைப் பதிவு செய்த பெண் உத்தியோகத்தருக்கு வைத்தியசாலை பணிப்பாளரினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர் ஒருவர் அதுவும் வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் இவ்வாறு டிக்டாக் காணொளியைக் கடமை நேரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை, அர்ப்பணிப்புக்கள் நிறைந்த சேவையாற்றும் வைத்தியசாலைக்கு அபகீர்த்தியையும் ஏனைய அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் உத்தியோகத்தருக்கும் களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post