வீட்டில் சேமித்து வைத்த பெற்றொலினால் 17 வயது மாணவி பரிதாபச் சாவு!

சண்டிலிப்பாய் பிரான்பற்று பகுதியில் வீடு தீப்பிடித்ததில் சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் சுதன் சதுர்சியா (வயது-17) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் அறையில் சிறுமி மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது விளக்கு விழுந்து வீடு தீப்பற்றியுள்ளது.

இதன்போது பேரூந்துக்கென சிறுமியின் தந்தையால் சேமித்து வைக்கப்பட்ட பெட்ரோலும் அறையில் காணப்பட்டுள்ளது.

பெட்ரோலும் தீப்பிடிக்கவே வீடு அதிகளவில் எரிந்திருக்கிறது. இதனையடுத்து வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சிறுமியை மீட்டு சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சடலம் சங்கானை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post