யாழில் விபத்து! இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு!!

பட்டா வாகனம் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 4 மணியளவில் நாவாந்துறை சூரியவெளி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

மோட்டார் வாகனத்தில் பயணித்த அதே இடத்தைச் சேர்ந்த சகாயதாசன் பவா (வயது -36) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார் என்று பொலிஸார் கூறினர்.

கடலுணவு நிறுவனத்துக்கு சொந்தமான பட்டா வாகனத்தின் சாரதி விபத்தையடுத்து அங்கிருந்து தப்பி தலைமறைவாகினார். வாகனத்தை அங்கிருந்து எடுக்க சிலர் முற்பட்டதனால் பதற்றநிலை ஏற்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் உறுதியளித்ததையடுத்து பதற்றநிலை தணிந்தது.
Previous Post Next Post