பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டை வீசித் தாக்குதல்! (வீடியோ)

பிரித்தானியாவின் வடக்கு நகரமான யார்க்கில் நடந்து சென்ற அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோர் மீது முட்டை வீச முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா மீது முட்டை வீசிய நபரை பிடித்து, பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

வடக்கு பிரித்தானியாவில் உள்ள யார்க் நகரில் நடைபெற்ற பாரம்பரிய விழாவில் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா கலந்துகொண்டு பொதுமக்களை சந்தித்துள்ளனர்.

இதன்போது, திடீரென கோஷங்கள் எழுப்பிய நபர் "இந்த நாடு அடிமைகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது" என்று கூச்சலிட்டு அவரை நோக்கி முட்டைகளை வீசியுள்ளார்.

இதையடுத்து முட்டைகளை வீசிய நபரை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post