சுவிஸ் பத்திரிக்கை நிருபரை சுற்றிவளைத்த சீன பொலிஸ்! நேரலையில் நடந்த சம்பவம்!! (வீடியோ)

சீனாவில் நேரலையில் இருந்த செய்தியாளரை பொலிஸார் கைது செய்ய வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கடுமையான கோவிட் கொள்கைக்கு எதிராக வெடித்துள்ள போராட்டங்கள் குறித்து செய்தியளிக்கும் பத்திரிக்கையாளர்களை சீன பொலிஸார் கைது செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், சுவிட்சர்லாந்தின் தேசிய ஒளிபரப்பாளரான RTS-ன் நிருபர், சீனாவின் கடுமையான கோவிட் கொள்கைக்கு எதிராக வெடித்துள்ள போராட்டங்கள் குறித்து சீனாவில் இருந்து நேரலையில் தெரிவிக்கும் போது காவல்துறையினரால் அணுகப்பட்டார்.

மைக்கேல் பியூக்கர் (Michael Peuker) என அறியப்பட்டுள்ள அந்த சுவிஸ் நிருபர், தான் நேரலையில் செய்தியை தொகுத்து வழங்கும்போது, அவரை மூன்று சீன பொலிஸ் அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர்.

அவர்கள் தன்னை கைது செய்வார்கள் என நினைத்து, இதைத் தொடர்ந்து நான் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவேன் என்று அவர் நேரலையில் கேமராவுக்கு தெரிவித்தார். இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர், பியூக்கர் தன்னை ஒரு பத்திரிகையாளராக அடையாளப்படுத்திக் கொண்டதாகவும், அதன் பிறகு அவரையோ அல்லது அவரது ஒளிப்பதிவாளரையோ அழைத்துச் செல்லாமல் பொலிஸ் அதிகாரிகள் வெளியேறியதாக ஒளிபரப்பாளர் பின்னர் தெரிவித்தார்.

இதேபோன்று, ஞாயிற்றுக்கிழமை ஒரு சம்பவம் நடந்தது. ஷாங்காயில் ஒரு போராட்டத்தை செய்தியாக்கிக் கொண்டிருந்த பிபிசி செய்தி பத்திரிகையாளர்களில் ஒருவரை சீன காவல்துறையினர் தாக்கி தடுத்து வைத்தனர் என்றும், பின்னர் அவரை பல மணிநேரங்களுக்குப் பிறகு விடுவித்ததாக பிபிசி தெரிவித்தது.
Previous Post Next Post