தமிழினியின் கணவர் பிரித்தானியாவில் காலமானார்!

சமூக, அரசியல் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான மகாதேவன் ஜெயக்குமரன் (ஜெயன்தேவா) பிரித்தானியாவில் வசித்து வந்த நிலையில் நேற்று காலமானார்.

இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை மகளிர் அணித் தலைவியாகவிருந்த தமிழினியின் கணவர் ஆவார்.

யாழ்.வடமராட்சி. கரவெட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் யுத்தத்தின் பின் தமிழினியைத் திருமணம் செய்திருந்தார். சில வருடங்களின் பின் தமிழினி காலமானார்.

சிறுநீரக நோயினால் பாதிகப்பட்டிருந்த ஜெயக்குமார், அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுக் காலமானார்.
Previous Post Next Post