பளை பேருந்து விபத்தில் யாழ்.மீசாலையைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் பலி!

கிளிநொச்சி - பளை ஏ-9 வீதி, முள்ளியடி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான ஜீவானந்தம் சுகிர்தினி (வயது-34) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் அவர், நேற்று நடந்த ஒளி விழாவில் கலந்து கொண்டு விட்டு தாமதமாக வீடு திரும்பும் போதே விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இவர் ஐந்து மற்றும் மூன்று வயதுடைய பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ப்புடைய செய்தி: 
Previous Post Next Post