ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நிகழ்த்தியதைத் தொடர்ந்து, பாரீஸுக்கு அருகே அமைந்துள்ள நகரம் ஒன்றின் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
வார இறுதியில் பாரீஸுக்கு அருகிலுள்ள Versailles என்னும் இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்று ஹேக்கர்களின் தாக்குதலுக்குள்ளானது.
அதனால், மருத்துவமனையில் திட்டமிடப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படும் நிலை உருவாயிற்று.
ஆறு நோயாளிகள் அவரசமாக வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் மூன்று பேர் தீவிர சிகிச்சைப்பிரிவிலும் மூன்று பேர் பச்சிளம்குழந்தைகள் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சரான Francois Braun தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் உயிர் காக்கும் இயந்திரங்கள் இயங்கிக்கொண்டிருந்தாலும், ஏதாவது பிரச்சினை ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிற பிரிவுகளில் பணி செய்த ஊழியர்களும் தீவிர சிகிச்சைப்பிரிவுகளைக் கண்காணிக்க அனுப்பப்பட்டார்கள்.
இந்த சைபர் தாக்குதல், மருத்துவமனையையே முற்றிலுமாக மறுசீரமைக்க வைத்துவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சரான Francois Braun தெரிவித்துள்ளார்.
இந்த சைபர் தாக்குதல் தொடர்பாக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.