யாழில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! (வீடியோ)

யாழ்.தென்மராட்சி - வரணி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த நபரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

வரணி - குடமியன் குளத்தில் நேற்று மாலை குளிக்கச் சென்றிருந்த 37 வயதான மகாலிங்கம் மணிவண்ணன் என்பவரே நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் காணாமல்போனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post