சென்னை விமான நிலையத்தில் இரு யாழ்ப்பாணப் பெண்களின் திருவிளையாடல்!

போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தர முயன்ற இரு பெண்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பயணிகள் கங்கா (46) மற்றும் சொர்ணகலா (22) என இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களும் சென்னை முகவரியுடன் கூடிய இந்திய கட வுச்சீட்டையும் இலங்கைக்கான சுற்றுலா விசாவையும் தயாரித்துள்ளதாக விமான நிலைய வட்டாரங் கள் தெரிவித்தன.

இருப்பினும், அதிகாரிகள் அவர்களின் தரவுத்தளத்தை சரிபார்த்தபோது, அவர்களின் கடவுச்சீட்டு போலியானது என்பதைக் கண்டறிந்து பயணிகளை விமானத்தில் ஏற விடாமல் தடுத்தனர்.

விசாரணையில், குறித்த பெண்கள் இலங்கை பிரஜைகள் என்பதும், சுற்றுலா விசாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து தங்கியிருப்பதும் தெரிய வந்தது.

இவர்கள் போலி கடவுச்சீட்டு பெற முகவர் நிலையத்துக்கு பணம் கொடுத்துள்ளனர். மேலதிக விசாரணைக்காக சென்னை காவல் நிலைய மத்திய குற்றப் பிரிவின் (சிசிபி) போலி கடவுச் சீட்டு பிரிவில் குறித்த பெண்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post