பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல்! ( சிசிரிவி காணொளி)

போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட கெப் வாகனத்தில் சென்று பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து கொள்ளையிட முற்பட்ட நபர் ஒருவர் வத்தளையில் உள்ள உல்லாச விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருடன் போலி இலக்கத் தகடுகள், பொம்மை கைத்துப்பாக்கிகள் மற்றும் போலி இலக்கத் தகடுகள் கொண்ட கெப் வண்டியும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறிப்பிடுகின்றனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (29) ஜாஎல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு சென்று அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் பொம்மை துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீடொன்றுக்கு சென்று அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிசிடிவி கெமராவில் சந்தேக நபர் ஒரு குழுவினருடன் வாக்குவாதம் செய்வதும் பொம்மை துப்பாக்கியை எடுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடைய ஜாஎல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
Previous Post Next Post