யாழில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! (படங்கள்)

யாழ். வடமராட்சி அல்வாய் பகுதியில் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அல்வாய் அம்பாள் கோவிலடியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க சண்முகம் நாகேஸ்வரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஸ்ரீஅம்பாள் வித்தியாலத்திற்கு பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குளிப்பதற்காக சென்றவரே தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த கிணறு 60 அடி ஆழம் கொண்டது. கிணறில் அமைக்கப்பட்ட கப்பி பாதுகாப்பற்ற முறையில் காணப்படுவதாகவும், குறித்த கிணற்றை சுமார் 10 குடும்பங்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பெண் குளிப்பதற்காக கிணற்றடிக்குச் சென்று உடைகளை தோய்த்த பின்னர் தண்ணீர் அள்ள முற்பட்ட போது தவறி விழுந்திருக்க முடியும் என தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post